Breaking

டிசம்பர் - 09. நோபல் பரிசு பெற்ற நார்வே இலக்கிய மேதை - பியார்ஸ்டர்ன் பிறந்த தினம் பற்றிய தகவல்கள் அறிந்து கொள்வோம்..


டிசம்பர் - 09. நோபல் பரிசு பெற்ற நார்வே இலக்கிய மேதை - பியார்ஸ்டர்ன் பிறந்த தினம் பற்றிய தகவல்கள் அறிந்து கொள்வோம்..


பிறப்பு..

பியார்ன்ஸ்டன் இலக்கிய மேதை வடக்கு நார்வேயில் உள்ள வைனி என்ற சிற்றூரில் 1832 ஆம் ஆண்டு பிறந்தார். இளம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றுச் சிறப்பித்தார்.

கல்வி..

பியார்ன்ஸ்டர்ன்  தன் 17வது வயதில் ஆஸ்லோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.இரண்டு ஆண்டுகளில் நாடகத்துறையில் சிறந்த அறிவைப் பெற்றார்.

பணிகள்...

இவர் நாடகத்துறையில் விமர்சனக் கட்டுரைகளையும்  எழுதத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இல்லஸ்ட்ரேட்டட் போக்பிளாட்  என்ற பிரபல இதழின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றார் சில ஆண்டுகளிலேயே அவர் புகழ் ஓங்கியது.

நோபல் பரிசு..

1859 ஆம் ஆண்டு பூமியை நேசிக்கிறோம் என்ற  இவர் எழுதிய கவிதை தேசிய கீதமாக நாடு முழுவதும் ஒலித்தது. இவர் நாவல்களில்  பாடல் வரிகளையே எழுதினார். 1903 ஆம்  ஆண்டு நோபல் பரிசை பெற்றார்.

No comments:

Powered by Blogger.